தேர்தல் சட்டத்தை மீறிய வேட்பாளர் கைது

 

தேர்தல் சட்டத்தை மீறி துண்டு பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த வேட்பாளர் ஒருவர் சிலாபம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சிலாபம் பொலிஸாரால் இன்று பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரான வேட்பாளரிடம் இருந்து கட்சி சின்னத்துக்கு புள்ளடியிடப்பட்ட 22 கையேடுகள் மற்றும் 02 பதாகைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.