தேர்தல் குறித்து பிரதமர் கருத்து

தேர்தல் மறுசீரமைப்பின் கீழ் நடைபெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தல் சுதந்திர தேர்தல் ஆணைக்குழுவின் கீழ் அமைதியான முறையில் நடைபெற்றிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் கீழ் மக்கள் தமது வாக்குகளை சுதந்திரமாக அளித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

முன்னர் நடைமுறையிலிருந்த விருப்புவாக்குகளின் போது இடம்பெற்ற குறிப்பிடத்தக்க வன்முறைகள் இந்த தேர்தலில் இடம்பெறவில்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

சட்டவிரோதமான முறையில் வாக்காளர்களுக்கு உணவுப்பொதிகள் மற்றும் ஏதேனும் வழங்கப்படும் நடைமுறை இம்முறை இடம்பெறவில்லை என்றும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.