தேர்தல்கள் ஆணைக்குழுவால் பிரதமருக்கு அவசர கடிதம்

தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.

மாகாண சபை தேர்தல் எல்லை நிர்ணய மதிப்பீட்டு அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு கோரியே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை, ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிட்ட பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவதில் தடை ஏற்பாடாது என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தலை நடத்துமாறு பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வரும் சமயத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]