தேர்தல்களை பிற்போடும் எண்ணம் சு.கவுக்கு இல்லை : லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

தேர்தல்களை பிற்போடும் எண்ணம் சு.கவுக்கு இல்லை. மாகாணசபைத் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்த வேண்டும் என்றே கூறுகிறோம் என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தலைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிற்போட நடவடிக்கையெடுத்து வருவதாக தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சு.கவுக்கு தேர்தலை பிற்போட வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை. மாகாண சபைத் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துமாரே தெரிவிக்கின்றோம்.

தேர்தலை ஒரே தினத்தில் வையுங்கள் என்று சு.க கூறுவது இறுதியாக கால எல்லை முடிவடையும் ஊவா மாகாண சபை கலைக்கப்படும் வரை இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. விரைவில் அதாவது 2018இல் ஒரே தினத்தில் தேர்தலை வைப்பதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

மாறி மாறி கடந்த காலங்களில் விருப்பு வாக்குமுறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டமையால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து அனைவரும் அறிவோம். நாட்டின் சொத்துகள் முதல் கோடிக்கணக்கான பணங்கள் செலவிடப்பட்டன. ஒரே தினத்தில் தேர்தலை நடத்துவது மூலம் தேர்தல் செலவும் குறைவடையும்.
தேர்தல் ஆணையாளர், ஆளுனர்கள், மாகாண முதலமைச்சர்களுக்கு இணக்கம் என்றால் ஒரே தினத்தில் தேர்தலை நடத்த முடியும். அனைத்து மாகாணங்களில் சு.கவின் முதலமைச்சர்களே உள்ளதால் இந்த விடயத்தை பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வரமுடியும்.

தேர்தலை பிற்போதுவது எமது இலக்கல்ல. இந்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அதுதான். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியும் அதுதான். தேர்தல்முறை மாற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு உள்ளிட்ட விடங்களை வாக்குறுதிகளாக கொடுத்தே மக்களிடம் வாக்குகளை பெற்றோம்.

பல்வேறு விடயங்களை பற்றி கடந்த காலங்களில் பேசினர். அதில் என்ன உண்மை இருந்தது? இந்தியாவால் இலங்கையில் அம்புலன்ஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட போது அதில் இந்தியர்கள் மட்டும்தான் சேவைக்கு அமர்த்தப்படுவர் என்றனர். ஆனால், அவ்வாறு இந்தியர்கள் அதில் சேவையில் உள்ளனரா?
சு.க தேசிய அரசில் இணையாவிடின் இன்று பிணைமுறி மோசடியை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டிருக்குமா?அரசின் அமைச்சர் ஒருவரை விசாரணை செய்ய கூடிய சாத்தியம் அன்று இருந்ததா?

இன்று வடக்கில் எந்தவொரு பிரச்சினை நடந்தாலும் விடுதலைப் புலிகள் என்கின்றனர். ஆவா குழு பற்றி பேசுகின்றனர். 1971, 1983 ஆண்டுகளில் பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகளின் பின்னிலையில் கலவரத்தை மேற்கொண்டவர்களா இருந்தனர்? சமூகத்தில் ஏற்படும் சில பிரச்சினைகளை காரணங்காட்டி எதற்கெடுத்தாலும் புலிகள் தோற்றபெறுகின்றனர் எனப் பொய் பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். இந்த நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாத வண்ணம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

விசேட நீதிமன்றத்தை அமைக்க போகின்றனர் எனவும் கூறினர். அவ்வாறு அமைக்கப்பட்டதா? தேசிய அரசில் இரண்டு கட்சிகள் உள்ளாதால் மாறுபட்ட கருத்துகள் இருக்கும். இரண்டு கட்சிகளும் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் செயற்படுகின்றோம். சு.கவின் 66ஆவது மாநாட்டை சக்திமயப்படுத்த ஜனாதிபதியுடன் அனைவரும் கைகோர்த்து செயற்பட வேண்டும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]