தேர்தலை ஒருபோதும் பிற்போடவே முடியாது : அரசுக்கு தேசப்பிரிய அறிவிப்பு

அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்துவதை காரணங்காட்டி கால எல்லை முடியும் மாகாண சபைகளுக்கான தேர்தலை பிற்போட முடியாது என்று தேர்தல் ஆணையகம் அரசின் உயர்மட்டத்தினருக்கு வலியுறுத்தியுள்ளதாக அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியாவலேயே இந்த உத்தியோகப்பூர்வ தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்தமாதம் வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் ஆயுட்காலம் முடிவடையவுள்ளது. தேர்தல் செலவை அடிப்படையாக கொண்டு அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடத்தும் வகையில் 20ஆவது திருத்தச்சட்டம் குறித்து அரச தரப்பில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

என்றாலும், கால எல்லை முடிவடையும் மாகாணங்களின் தேர்தலை ஒருபோதும் பிற்போட முடியாது என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். சு.கவின் மத்திய குழுக் கூட்டத்தில் கூட 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

20ஆவது திருத்தச்சட்டத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி 2019ஆம் ஆண்டு அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதில் அரசு குறியாகவுள்ளது. ஆனால், செலவுகள் உள்ளிட்ட சில காரணங்களை காட்டி கால எல்லை முடிவடையும் மாகாண சபைகளின் தேர்தலை ஒருபோதும் பிற்போட முடியாது என்று தேர்தல்கள் ஆணையாளர் அரசின் பிரதான இரண்டு பங்காளிக் கட்சிகளுக்கும் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]