“தேர்தலுக்கு பின்னர் மஹிந்தவின் கட்சி அழிந்துவிடும்”

“தேர்தலுக்கு பின்னர் மஹிந்தவின் கட்சி அழிந்துவிடும்”

மஹிந்தவின் கட்சி

தேர்தலுக்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் கட்சி அழிந்து போய் விடும் என்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றுபடுத்தும் முயற்சிகளை நாமல் ராஜபக்ஷவும் மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோரே சீர்குலைத்ததாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடக சந்திப்பின் போது, அமைச்சரவை இணைப்பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றுபடுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட முயற்சிகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்சவும், பிரசன்ன ரணதுங்கவுமே சீர்குலைத்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் உள்ள பெரும்பாலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளவே விரும்பினர். ஆனால் அது தடுக்கப்பட்டது.

உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முற்றாகவே அழிந்து விடும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]