தேர்தலுக்கு பின்னர் அமைச்சரவையில் மாற்றம்

உள்ளுராட்சி சபைத் தேர்தலின் பின்னர் அமைச்சரவைச் சீர்திருத்தம் ஒன்றை முன்னெடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் 17ஆம் திகதி மத்திய வங்கி முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இடம்பெறும் அரசியல் நிகழ்வுகளை அவதானித்து இந்த மாற்றத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

தேர்தலின் முடிவுகளையும் இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது ஜனாதிபதி அவதானத்தில் எடுத்துக் கொள்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]