தேர்தலில் வாக்களிக்க மதுபான கூப்பன் – இ.தொ.கா முறைப்பாடு

உள்ளுராட்சிசபை தேர்தலில் வாக்களிக்கும் மக்களுக்கு மதுபானகூப்பன் பொகவந்தலாவை நிருபர்வழங்கபட்டுள்ளமை தொடப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் எஸ்.அருள்சாமி, தேர்தல் ஆனையாளர் மஹிந்த தேசபிரியவிடம் முறைபாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

டிக்கோயா பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருக்கும் அமைச்சர் ஒருவரே, மதுபான நிலையங்களுக்கு சென்று மாபானம் பெற்று கொள்வதற்கான கூப்பனை பொதுமக்களுக்க விநியோகிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொட்டகலை தொண்டமான் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.