தேர்தலில் மஹிந்த மீண்டெழுந்தமை சிவப்பு எச்சரிக்கை – மனோ

“தேர்தல் வெற்றியின் மூலம் மஹிந்த மீண்டும் வந்துள்ளார். அவரது வெற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை” அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு இந்து கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில், “2015 ஆம் ஆண்டு கிடைத்த மக்கள் ஆணையை புரிந்துக்கொண்டு நடைமுறைப்படுத்த தவறிவிட்டு, ஜனாதிபதியும், பிரதமரும் ஒருவருக்கு எதிராக இன்னொருவர் ஒரே அரசாங்கத்துக்கு உள்ளேயே கட்சி அரசியல் செய்ய முயன்றதன் பிரதி பலனே இதுவாகும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மஹிந்தவின் வாக்குகள் இந்த அரசாங்கத்துக்கு எதிரான பெரும்பான்மை ஆட்சேபனை வாக்குகள் என்பதை இவர்கள் இருவரும் தெளிவாக புரிந்துக்கொள்ள முயல வேண்டும்” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஒன்றுமே நிகழாதது போல் நாம் இனியும் இருக்க முடியாது. தமிழர்கள் விரும்பினாலும். விரும்பாவிட்டாலும் கூட, இதுதான் பெரும்பான்மை சிங்கள மக்களின் இன்றைய தீர்ப்பு என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]