தேர்தலில் போட்டியிடும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் முறைப்பாடு

ஊடகவியலாளர்கள்

ஊடகவியலாளர்கள் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் கையொப்பத்துடன், குறித்த அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் ஊடகவியலாளர்கள் அவர்களுடன் தொடர்புடைய பத்திரிகைகளை மற்றும் இலத்திரனியல் ஊடகங்களை பயன்படுத்தி அவர்களின் வேட்பான்மையை ஊக்குவிக்கும் வகையிலும் ஏனைய அரசியல் காட்சிகளையும் வேட்பாளர்களையும் பின்னடைவு செய்யும் வகையிலும் செய்திகள் வெளியிடுவதாகவும் / ஒளிபரப்புகள் மேற்கொள்வதாகவும் பல முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் தலைவர்கள், பிரதம நிறைவேற்று அலுவலர்கள், செய்திப் பணிப்பாளர்கள் மற்றும் ஊடக வழிகாட்டல் தொடர்பான செயற்பாட்டு அங்கத்தவர்களுக்கு இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]