தேரர் மீது துப்பாக்கிப் பிரயோகம் பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

தேரர் மீது துப்பாக்கிப் பிரயோகம் பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கோபாவக தம்மிந்த தேரர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மஹாசென் ஆலயத்தின் முன்னாள் கப்புராளையான போப்பே கெதர அசேல லக்ஷ்மன் பண்டார என்பவரே பிரதான சந்தேக நபர் என அவர் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன், சந்தேக நபர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேக நபர் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வாள் உட்பட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் பிரதம குருவான கோபாவக தம்மிந்த தேரர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இனந் தெரியாத நபர்களால், நேற்று இரவு 11 மணியளவில் குறித்த துப்பாக்கிச் சூடு, மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோபாவக தம்மிந்த தேரர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]