முகப்பு News Local News தேரரை தேடும் பணியில் பொலிஸார் – தேரர் தலைமறைவு

தேரரை தேடும் பணியில் பொலிஸார் – தேரர் தலைமறைவு

நிதி மோசடியில் ஈடுபட்ட தேரர் ஒருவரை கைது செய்யும் பொருட்டு அஹூங்கல காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களை ஏமாற்றி பல லட்சம் ரூபா நிதி மோசடி செய்துள்ளதாக குறித்த தேரர் மீது பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனினும் குறித்த தேரர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தேரர் தொடர்பில் அஹூங்கல காவல்துறையில் மாத்திரம் 15 பேர் முறைப்பாடு செய்துள்ளனர்.

அவர் கடந்த இரண்டு வாரங்களாக தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இவர் கனடாவின் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியர் எனக்கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com