தேயிலை தடையை நீக்குமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம் மைத்திரி கோரிக்கை

தேயிலை தடையை நீக்குமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம் மைத்திரி கோரிக்கை

இலங்கையின் தேயிலை தடையை நீக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் உத்தியோகப்பூர்வமாக கோரிக்கை விடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை இருந்து தேயிலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்ய அரசாங்கம் தடை விதித்திருப்பது, இலங்கை அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைப் பொதிக்குள் வண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இலங்கையில் இருந்து தேயிலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்த நிலையில் ரஷ்யாவின் தற்காலிக தடையை நீக்குவது குறித்து ஆலோசிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுக்கவுள்ளார்.