விஷப்பூச்சிகள் கடித்தால் என்ன செய்வது? அனைவரும் அறிந்துவைத்திருக்கவேண்டிய ஒன்றாகும்!

பல்லி, குளவி, தேனீ போன்ற விஷப்பூச்சிக்கடிகள் மற்றும் நாய் கடித்துவிட்டால் என்ன செய்வது என்று பார்ப்போம்,

பல்லி

பல்லி கடித்து விட்டால், அவுரி இலை மற்றும் அதன் வேர் ஆகியவற்றை 50 கிராம் எடுத்து, 500 மில்லி தண்ணீரில் போட்டு 100 மில்லி அளவுக்கு காய்ச்சி, தினமும் 25 மில்லி வீதம் நான்கு நாட்கள் குடித்து வந்தால், பல்லி கடித்த விஷம் குறையும்.

 

பூச்சி

சில நேரத்தில் பெயர் தெரியாத எந்த பூச்சிகள் கடித்து விட்டாலும், வெதுவெதுப்பான நீரில், மக்காச்சோளமாவு, சமையல் சோடா ஆகிய இரண்டையும் சேர்த்துக் கலந்து, பூச்சிக் கடித்த இடத்தில் தடவினால், விஷம் இறங்கும்.

 

அரணை

அரணை கடித்தாலோ அல்லது நக்கினாலோ சீமை அகத்தி இலையை விழுதாக அரைத்து, அதை தேங்காய் எண்ணெயில் குழைத்து பதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் விஷம் குறையும்.

 

தேனீ, குளவி

தேனீ மற்றும் குளவி கொட்டினால் மாங்காய் காம்பில் இருந்து வழியும் பாலை கடிவாயில் தடவ வேண்டும். இதனால் விஷம் இறங்கும். அதன் வீக்கம் குறைய கடித்த இடத்தில் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

 

தேள்

தேள் கடித்து விட்டால், 20 மிளகு மற்றும் சிறிதளவு தேங்காய் இரண்டையும் சேர்த்து மென்று சாப்பிட வேண்டும். இதனால் தேள்கடி விஷம் குறையும்.வெள்ளைப் பூண்டை அரைத்து கடிவாயில் தடவலாம் அல்லது புளியைக் கரைத்து சிறிது குடித்துவிட்டு, தேள் கொட்டிய இடத்தில் தடவலாம் அல்லது தேன், எலுமிச்சைச் சாறு இரண்டையும் குழைத்துக் கூட தடவினாலும் விஷம் இறங்கும்.

 

கம்பளிப்பூச்சி

கம்பளிப்பூச்சியின் ரோமம் உடலில் பட்ட இடத்தில் நல்லெண்ணெய் தடவினால் வீக்கம், அரிப்பு நீங்கும். அல்லது முருங்கை இலையை அரைத்து பற்று போடலாம். அல்லது வெற்றிலை சாறு எடுத்து அழுத்தி தேய்க்கலாம்.

 

பூரான் 

பூரான் கடித்து விட்டால், வெற்றிலைச் சாற்றில் மிளகை நான்கு மணி நேரம் ஊறவைத்து, அதை காயவைத்து சாப்பிட்டு வர வேண்டும்.துளசி இலைகளைக் காயவைத்து பொடி செய்து, 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டாலும் பூரான் கடி விஷம் குறையும்.

விஷக்கடியின் வலி குறைய என்ன செய்ய வேண்டும்?

கரிசலாங்கண்ணி இலையை ஆட்டுப்பாலில் அரைத்து சாப்பிட்டால், விஷக்கடியால் ஏற்படும் வலி குறையும்.விஷப்பூச்சிகள் எது கடித்தாலும், உடனடியாக கடிவாயில் சுண்ணாம்பைத் தடவி, எட்டு மிளகை வாயில் போட்டு மென்று விழுங்க வேண்டும்.

நாய், பூனை, பாம்பு கடித்து விட்டால் என்ன செய்வது?

நாய், பூனை ஆகிய செல்லப் பிராணிகள் கடித்தால், உடனடியாக வெங்காயம், உப்பு ஆகிய இரண்டையும் சேர்த்து அரைத்து கடிபட்ட இடத்தில் தடவினால், விஷம் குறையும்.சாதாரண பாம்புகள் கடித்தால், சுண்ணாம்பை தடவி, எட்டு மிளகை வாயில் போட்டு மென்று விழுங்க வேண்டும். ஆனால் விஷப்பாம்புகள் கடித்தால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]