தேனில் பிணத்தை ஊற வைத்து உண்ணும் சீனர்கள்

தேனில் பிணத்தை ஊற வைத்து உண்ணும் சீனர்கள்

தேனில் பிணத்தை ஊற வைத்து உண்ணும் சீனர்கள் ,அனைத்து விதமான நரபலி அல்லது மனித மாமிசம் உண்ணும் வழக்கம் மனித வரலாற்றில் காணப்பட்டுள்ளது. இது ஏதோ கற்காலத்தில் நடந்த சம்பவங்கள் என கருதிட வேண்டாம். நாகரீகம் வளர்ந்த பிறகு தான் மனிதன் மனித தன்மையற்று நடந்துக் கொள்ள ஆரம்பித்தான்.

அதிலும், சீனாவில் ஒரு மனித மாமிசம் உண்ணும் வழக்கம் இருந்துள்ளது. அது சற்றே வினோதமாக காணப்படுகிறது. தேன் மருத்துவ குணங்கள் கொண்ட நீண்ட காலம் கெடாமல் இருக்கும் பொருள். பிணம் என்பது இறந்த சில நிமிடங்களில் கெட்டுப் போகும் பொருள்.

இந்த இரண்டையும் எந்த காம்பினேஷனில் முடிச்சு போட்டனர் இந்த சீனர்கள் என்பது குழப்பமாகவே இருக்கிறது.

பதினாறாம் நூற்றாண்டில் – பதினாறாம் நூற்றாண்டில் சீனாவில் Mellified Flesh என்பது ஒரு மருத்துவ பொருளாக காணப்பட்டுள்ளது. அதாவது மனித உடலை தேனில் பதப்படுத்தி மருத்துவ பொருளாக பயன்படுத்தியுள்ளனர். இதற்காகவே சிலர் தங்கள் உயிரை தியாகம் செய்து அல்லது உடலை தானம் செய்யும் வழக்கமும் கொண்டிருந்துள்ளனர். இதை அறிவியலுக்காக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அரேபிய மருத்துவ முறை – இது ஆரம்பத்தில் ஒரு அரேபிய மருத்துவ முறையில் இருந்து கொண்டுவந்தனர் என கூறப்படுகிறது. இந்த முறையில் இறந்த மனித உடலை மருந்தாக மாற்ற முடியும் என்றும் கருதியுள்ளனர். இதன் மூலம் உடைந்த எலும்புகளை சேர்க்க முடியும் என்றும் சீன மருத்துவர் லி ஷிசென் கூறியுள்ளார்.

மெல்லிஃபிகேஷன் – இந்த மெல்லிஃபிகேஷன் செயல் கொஞ்சம் கொடூரமான ஒன்று தான். ஒரு மனித உடலை மெல்ல மெல்ல தேனில் பதப்படுத்தி மனித கேண்டி பார் போல ஆக்கிவிடுகிறார்கள். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இது ஒரு மனிதன் உயிருடன் இருக்கும் போதே செய்கிறார்கள்.

தேன் டயட் – இந்த செயலுக்கு தங்கள் உடலை தானமாக அளிக்கும் நபர்களும் இருந்துள்ளனர். இந்த மெல்லிஃபிகேஷனுக்கு உடலை தானம் செய்த நபர் தேனை தவிர வேறு எந்த உணவையும் உட்கொள்ள மாட்டார்கள் சிலர் அவ்வப்போது தேனில் தான் குளிப்பார்கள். மெல்ல, மெல்ல அந்த நபரின் உடலில் தேன் தவிர வேறு எந்த உணவும் இருக்காது. இதை தேன் டயட் என கூறுகிறார்கள்.

கல்லறையில் – இந்த தேன் டயட் மேற்கொள்ளும் போது, அதாவது தேனை மட்டும் உண்டு வரும் நபர் கொஞ்ச நாட்களில் மரணம் அடைந்துவிடுவார். இறந்த பிறகு அந்த உடலை ஒரு கல்லறையில் வைத்து அதனுள் தேன் முழுக்க ஊற்றி வைத்துவிடுவார்கள்.

ஆண்டி பாக்டீரியா – நூற்றாண்டு காலத்திற்கு அந்த கல்லறை தேனில் ஊறி இருக்கும். தேன் எந்த பொருளையும் கெட்டுப்போக விடாது. இதனால் ஆண்டி-பாக்டீரியா தாக்கம் கொண்டு உடல் அப்படியே இருக்கும். நூற்றாண்டு காலம் முடிந்த பிறகு அந்த உடல் ஒரு சர்க்கரை உருண்டை மாதிரி ஆகியிருக்கும்.

உடைந்த எலும்பு – இப்படி நூற்றாண்டு காலம் முடிந்த பிறகு எடுக்கப்படும் உடலை தான் மெல்லிஃபிகேஷன் மேன் என்கிறார்கள். இந்த உடலை காயங்கள் மற்றும் உடைந்த எலும்புகளுக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள். இதை உடல் உள்ளுறுப்பு கோளாறுகளுக்கும் மருந்தாக எடுத்து அப்படியே சாப்பிடுகிறார்கள்.

அகழ்வாராய்ச்சி – ஒருசில நூற்றாண்டுகள் இந்த முறை சீனாவில் இருந்துவந்தது. சிலர் இந்த மெல்லிஃபிகேஷன் மேன் சிறந்த மனிதர்களால் உருவாக்கப்பட்ட விஷயம் என கருதினர். ஆனால், இப்படி சில உடல் இருந்ததாக மருந்தாக உட்கொண்டனர் என தகவல்கள் தான் கிடைத்தனவே தவிட, அகழ்வாராய்ச்சியில் எந்த ஒரு உடலும் இப்படி ஆதாரமாக கிடைக்கவில்லை.

அரேபியா மற்றும் சீனா – அரேபியா மற்றும் சீனாவில் மட்டுமே இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. முக்கியமாக மருந்தாக இந்த மெல்லிஃபிகேஷன் மேனை பயன்படுத்தியதாக மட்டுமே தடயங்கள் கூறுகின்றன. இது பதினாறாம் நூற்றாண்டுக்கு பின்னர் ஒழிந்து போனது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]