தேநீர் விலை 5 ரூபாயால் குறைப்பு

தேநீர் கோப்பையொன்றின் விலை நாளை முதல் 5 ரூபாயால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]