தேடி வரும் ஹீரோயின்களை புறக்கணிக்கும் ஹீரோ!

ஒரு ஹீரோ நடித்து ஒரு படம் ஹிட் ஆனாலே அவருடன் ஜோடி போட நடிகைகள் விரும்புவார்கள். சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என திட்டமிட்டு ஹீரோக்களை வளைத்த ஹீரோயின்களால் ஒரே ஒருவரை மட்டும் வளைக்க முடியவில்லை.

இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாகி கடந்த ஆண்டு பெக்கர் படம் மூலம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த ஹீரோதான் அவர். முன்னணி ஹீரோயின்கள் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

முன்னணி ஹீரோயின்கள் என்றால் படத்தின் புரமோஷன்களில் அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். சமயத்தில் வராமல் டிமிக்கி கொடுக்கவும் தயங்க மாட்டார்கள். தான் கஷ்டப்பட்டு நிலை நிறுத்தியிருக்கும் கேரியருக்கு இந்த ஹீரோயின்கள் ஆபத்தாக அமையலாம் என்ற ஹீரோவின் எச்சரிக்கை உணர்வுதான் காரணம்.

மனைவியே படங்களின் தயாரிப்பாளராக இருப்பதும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.