தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு

தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் திறந்துவைப்பு

தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் சனிக்கிழமை (20) மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழாவது, எட்டாவது வீட்டுத்திட்டமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் விழுதுநகர், சுபீட்சம் நகர் ஆகிய வீட்டுத்திட்டங்களே இவ்வாறு திறந்துவைக்கப்பட்டன.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாச தலைமையில் இந்த வீட்டுத்திட்டம் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடுகள்,நல்லிணக்க மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் பிரதியமைச்சர் அலிசாகீர் மௌலானா,பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இரண்டு வீட்டத்திலும் 43 வீடுகள் திறந்துவைக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

அத்துடன் வீடமைப்பு அதிகாரசபையில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்கள் சிலருக்கு இதன்போது நிரந்தர நியமனம் வழங்கப்பட்டதுடன் வீட்டு உரிமையாளர்களுக்கான பத்திரங்களும் வழங்கப்பட்டதுடன் ஒரு தொகுதி மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.

தேசிய வீடமைப்பு தேசிய வீடமைப்பு தேசிய வீடமைப்பு தேசிய வீடமைப்பு தேசிய வீடமைப்பு தேசிய வீடமைப்பு தேசிய வீடமைப்பு தேசிய வீடமைப்பு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]