தேசிய பொருளாதார சபையை அமைக்க அமைச்சரவை அனுமதி

பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்தும் வகையில் தேசிய பொருளாதார சபையொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தெரிவித்துள்ளது.

கொழும்பு டார்லி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சரத் அமுனுகம மேற்கண்டவாறு கூறினார்.

ல் தேசிய பொருளாதார சபையொன்றை அமைப்பதற்கு தேசிய அரசின் இருக்க கட்சிகளுக்கு இடையிலும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இரண்டு கட்சிகளுக்கும் இடையில் உள்ள பொருளாதார முரண்பாடுகளையும், கொள்கை முரண்பாடுகளையும் தீர்த்துக்கொள்ளும் வகையில் தேசிய பொருளாதார சபை உருவாக்கப்படவுள்ளது.

இதில் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் குறித்த அமைச்சுகளில் செயலாளர் எனப் பலர் அதில் அங்கம் வகிக்கின்றனர் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]