தேசிய நிலையான வளர்ச்சி இலக்குகளை எளிதில் எட்டுவதற்கு இலங்கையின் பாரிய கூட்டுறவுத் துறை பக்கபலமாக அமையும்

இலங்கை அதன் 2030 ஆம் ஆண்டை நோக்கிய தேசிய நிலையான வளர்ச்சி இலக்கு திட்டத்தை விரைவாக செயற்படுத்துவதற்கு அதன் பாரிய கூட்டுறவுத் துறையினை இணைத்துள்ளது. அரசாங்கமும் கூட்டுறவு அமைப்பும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் நமது தேசிய நிலையான வளர்ச்சி இலக்குகளை நாம் எளிதாக அடைய முடியும் என்பதை நான் வலியுறுத்துகிறேன.; இலங்கையின் கூட்டுறவு நிறுவனங்கள் பல துறைகளில் செயற்பட்டு வருகின்றன. இவை சமூக அடிப்படையிலான அமைப்பாக இருந்து நிலையான வளர்ச்சி இலக்குக்கு ஆதரவளிக்க முடியும் என தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த வாரம் வியட்னாம் ஹனோய் மாநிலத்தில் ‘நிலையான வளர்ச்சி இலக்கு மற்றும் வலுவான பங்குடைமையினை, அரசாங்கம் மற்றும் கூட்டுறவு பங்குதாரர்களுக்கிடையில் மேம்பாடுத்தல்’ என்ற தொனிப்பொருளில் 2017 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கூட்டுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு கூறினார்.தேசிய நிலையான வளர்ச்சி

இம் மாநாட்டில் கலந்துக்கொண்ட சர்வதேச அமைச்சர்கள் மத்தியில் அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து உரையாற்றுகையில்: இலங்கை கூட்டுறவுத் துறையின் பொறுப்புவாய்ந்த அமைச்சர் என்ற ரீதியில் தற்போது இலங்கை அதன் தேசிய கூட்டுறவு கொள்கை வகுப்பீட்டு உருவாக்க வேலைத்திட்டத்தின் இறுதி கட்டத்ததை அடைந்து வருகிறது என்பதை நான் இங்கு வலியுறுத்துகின்றேன். 1906 ஆம் ஆண்டு மத்திய மாகாணத்தில் இலங்கையின் முதலாவது கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டது.

பல தசாப்தங்களுக்கு பின்னர் ஏற்பட்ட சமூக அரசியல் மாற்றங்கள் இன்று இலங்கையின் கூட்டுறவுத்துறையினை இன்னும் மையப்படுத்தப்பட்டதாகயில்லை. இது ஒரு பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய விடயமாகும். மத்திய அரசின் இவ்விடயத்திற்குரிய அமைச்சர் என்ற ரீதியில் தேசிய கூட்டுறவு கொள்கை வகுப்பீட்டு உருவாக்கம் எனக்கு ஒரு முக்கிய பொறுப்பு என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். மாகாண அமைச்சர்கள், மாகாண கூட்டுறவு திணைக்களங்கள் மற்றும் மாகாண மட்ட கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுக்களுடன் நாங்கள் கூட்டிணைந்து செயற்படுகின்றோம்.

கூட்டுறவு துறையை பாதுகாப்பதற்காக கொள்கைகள் மற்றும் மதிப்புகள் தொடர்பாக அரசாங்கத்திற்கும் கூட்டுறவு அமைப்புக்கும் இடையே கூட்டிணைந்த
புரிந்துணர்வு, பாலினம் மற்றும் இளைஞர் போன்ற பொருத்தமான காரணிகளுக்கான ஒத்துழைப்பு என்பன் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். இந்த மாநாடு 2030 இலக்குகளை எதிர்நோக்குகிறது. இதனால் அரசாங்கமும் கூட்டுறவு அமைப்பும் ஒன்றாக செயற்படுவதுடன் மூலம் நமது தேசிய நிலையான வளர்ச்சி இலக்குகளை எளிதாக அடையலாம் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.

தற்போது தெற்காசிய நாடுகள் மத்தியில் அபிவிருத்தி கலந்துரையாடல்களின் போது பாலின விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது. கொள்கை திட்டம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான திட்டங்களை கூட்டுறவு அமைப்புடன் இணைந்து செயல்படுத்துவது நிலையான வளர்ச்சி இலக்கு வெற்றிக்கு ஒரு நெம்புக் கோலாக அமைய முடியும். தற்போது தலைவர்கள் மற்றும் உயர் முகாமைத்துவ மட்ட அதிகாரிகள் மத்தியில் பெண்கள் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவேயுள்ளது.

இலங்கையின் கூட்டுறவு துறை செயற்பாடுகள் விவசாயம். நுகர்வோர்.உற்பத்தி> சுகாதார சேவைகள் கைத்தொழில் நிதி எரிபொருள் விநியோகம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீது முழுமையான ஈடுபாடு இருப்பதால் நிலையான வளர்ச்சி இலக்குக்கு சமூக அடிப்படையிலான இயக்கமாக ஒத்துழைக்க முடியும்.

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]