உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன் : விமல் வீரவங்ச

பிணை வழங்காமையால் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிடம், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சிறைச்சாலை அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை அவர் நிராகரித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உண்ணாவிரதம் இருப்பாராயின் அவரது உடல்நலம் பாதிப்படைந்து செல்வதனாலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருப்பதனால், தங்களது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது என சிறைச்சாலை அதிகாரிகள் அவருக்கு தெளிவுபடுத்திய பின்னரும் வேண்டுகோளை அவர் மறுத்துள்ளார்.

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல் நலத்துக்கு இதுவரையில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]