தேசிய சமாதானத்தை உருவாக்கி இலங்கையர் என்ற நிரூபிப்பது அனைவரினதும் பொறுப்பு

தேசிய சமாதானத்தை உருவாக்கி  இலங்கையர் என்ற நிரூபிப்பது அனைவரினதும் பொறுப்பு.

தேசிய சமாதானத்தை தேசிய சமாதானத்தை உருவாக்கி இலங்கையர் என்ற அடையாளத்தை நிரூபிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினை, மதப்பிரச்சினை மற்றும் மொழிப்பிரச்சினை என்பவற்றை அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்றனர்.

ஆனால், அரசாங்கம் என்ற அடிப்படையில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தரின் போதனையை பின்பற்றுதென்பது அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகும்.

எனினும், இதனை முன்கொண்டு செல்லக்கூடிய அவசியம் சிலருக்குஇல்லை.

சில ஊடகங்கள் ஒரு இனம், ஒரு மதத்தை மட்டும் பேசி தமது செல்வாக்கை அதிகரிக்க முயற்சிக்கின்றதாக பிரதமர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன மற்றும் மதவாதம் என்பனபே வர்த்தக போட்டித் தன்மைக்கு இடையில் உள்ளன.

இந்த நிலையில், தேசியசமாதானத்தை உருவாக்கி இலங்கையர் என்ற அடையாளத்தை நிரூபிப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.

அதற்கு கிடைத்துள்ள இறுதி சந்தர்ப்பம் இதுவாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.