தேசிய அரசில் வெளியேற உடும்புப்பிடி பிடிக்கும் சு.கவின் தரப்பு : சமாதான புறவாக களத்தில் சந்திரிகா

தேசிய அரசில் இரண்டு வருடம் இணைந்து செயற்பட செய்துகொண்டு ஒப்பந்தம் நிறைவடையவுள்ள நிலையில் ஐ.தே.கவுடன் தொடர்ந்து செயற்பட முடியாது எனக் கூறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருசிலர் வெளியேற உள்ளாதாக அண்மையில் இடம்பெற்ற சு.கவின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறியிருந்தனர்.

இவர்களை டிசம்பர் வரை பொறுமைக் காக்குமாறு ஜனாதிபதி கூறியிருந்த போதிலும் தாங்கள் வெளியேறுவதில் உறுதியாக உள்ளதாக தொடர்ந்தும் உடும்புபியாக உள்ளதாக சு.கவின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது. இவர்களை வெளியேறவிடாமல் தக்கவைத்துக்கொள்வதற்கான சமாதானப் புறவாக முன்னாள் ஜனாதிபதியும் சு.கவின் சிரேஸ்ட ஆலோசகருமான சந்திரிகா குமாரத்துங்க களமிறங்கியுள்ளார்.

அவர் பலருடன் தொலைப்பேசியில் உரையாடியுள்ளதாகவும், கடந்தவாரம் வெளியேறுவதாக கூறிய சிலரை சந்தித்து கலந்துரையாடியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தனர். இந்நிலையில் இவ்வாரம் தேசிய அரசில் இருந்து வெளியேறவுள்ளதாக கூறப்படும் சு.கவின் 18 உறுப்பினர்களை சந்தித்து மீண்டும் சந்திரிகா கலந்துரையாடவுள்ளார்.

அரசமைப்பு உள்ளிட்ட பல்வேறு நல்லிணக்கச் செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதால் இவர்களை பொருமைக்காக்குமாறு சந்திராக கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும், சு.கவின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி கூறியுள்ள கருத்தை இவர்கள் நிராகரித்துள்ளதால் சமாதானப் புறவாக களமிறங்கியுள்ள சந்திராக இந்த விடயத்தை எவ்வாறு அணுக போகிறார் என்பது பெருத்த கேள்வியாகவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]