தேசிய அரசின் இரண்டு பூர்த்தி இலங்கைக்கு சனிப்பிடித்த நாள் : 17ஆம் திகதி போராட்டத்தில் குதிக்கும் எதிரணி

தேசிய அரசின் இரண்டாண்டு பூர்த்தியை இலங்கைக்கு சனிப்பிடித்த நாளாக பிரகடனப்படுத்தி நாடுதழுவிய போராட்டத்தை முன்னெடுக்க எதிரணித் தீர்மானித்துள்ளதாக தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு மலர்ந்தது. அதன் பின்னர் மீண்டும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிக ஆசங்களைப் பெற்று தேசிய அரசை நிறுவியது.

ஐ.தே.கவுடன் இணைந்து ஆட்சியில் பங்கொள்ள முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான பொது எதிரண சுயாதீனாக செயற்பட ஆரம்பித்தது. அன்றுமுதல் இன்றுவரை தேசிய அரசுக்கு எதிராக போராடிவரும் பொது எதிரணி எதிர்வரும் 17ஆம் திகதி அதாவது, தேசிய அரசு அமையப்பெற்று இரண்டுவருட பூர்த்தி தினத்தை இலங்கைக்கு சனிப்பிடித்த தினமாக பிரகடனப்படுத்தி நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

அத்துடன், பிரதான கூட்டமொன்று கொழும்பை அண்மித்து நடத்துவத்றகான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]