தேசிய அரசாங்கத்தை தொடர ஜனாதிபதி – பிரதமர் ஒப்பந்தம்

தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜனாதிபதி – பிரதமர் ஆகியோர் விரைவில் கையெழுத்திடவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று அல்லது நாளைய தினம் கைச்சாத்திடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னரே, புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]