தேசிய அரசாங்கத்தில் இருந்து விலக சு.க நடவடிக்கை

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கான தினத்தை குறித்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதனை முன்னாள் அமைச்சர் Lakshman Yapa Abeywardenaலக்‌ஷ்மன் யாபா அபேவர்தன கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் மத்திய செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]