தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா??

நமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷேசத்திற்கும் தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது ஒரு சம்பிரதாய சடங்காகும்.

அப்படி இருக்கும் போது நமது வீட்டில் அல்லது கோவில் பூஜைக்கு பயன்படுத்தும் தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்?

தேங்காயில் இருக்கும் மூன்று கண்களில் முதல் கண் பிரம்மன், இரண்டாம் கண் லஷ்மி, மூன்றாம் கண் சிவன் என்று போற்றப் படுகிறது.

அப்படி இருக்கும் தேங்காயை நாம் பயன்படுத்தும் போது, அது அழுகி இருப்பது, கோணலாக உடைவது, சிதறு தேங்காய் உடைக்கும் போது சுக்கு நூறாக உடைவது, தேங்காயில் பூ வருவது இது போன்ற அனைத்து விஷயத்திற்கும் நன்மை மற்றும் தீமைக்கான சகுனங்கள் உண்டு.

அந்த வகையில் தேங்காய் உடைக்கும் போது, அது அழுகிய நிலையில் இருந்தால், அவர்களுக்கு அது ஏமாற்றம் மற்றும் கலக்கத்தை கொடுத்து, மனதில் குழப்பத்தை அளிப்பதால், இதை நாம் அபசகுனமாக நினைக்கிறோம்.

ஆனால், உண்மையில் நாம் உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால், அது நல்ல அறிகுறி என்றும். அவர்களை அண்டி இருக்கும் தீய சக்திகள், பீடை, கண்திருஷ்டி போன்றவை அகன்று போகிறது, எனவே இது ஒரு நல்ல அறிகுறி தான் என்று கூறப்படுகிறது.

நாம் உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால், அவர்களின் வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்று அர்த்தமாகும்.
நாம் உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால், அது நமக்கு பணவரவு, நல்ல லாபம், எதிர்பாராத நல்ல விஷயங்கள் போன்றவை நடக்கும் என்பதை குறிக்கும் ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]