தேங்காயின் விலை அதிகரிப்பு

தேங்காயின் விலை அதிகரிப்பு

தேங்காயின் விலை

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தெங்கு செய்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளது.

நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் தெங்கு மற்றும் தெங்குப்பொருள் ஏற்றுமதி அதிகளவில் செல்வாக்கு செலுத்துகிறது.

2017 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் தெங்கு உற்பத்தித்துறையை மேம்படுத்த தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 75 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது.

எனினும், தெங்கு முக்கோண வலயத்தின் புத்தளம், சிலாபம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் தெங்கு செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் 7 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெங்கு செய்கை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

முந்தல், கல்பிட்டி, வண்ணாத்திவில்லு, பள்ளம, ஆனமடுவ உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் வௌிநாடுகளுக்கான தேங்காய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதுடன், தும்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று உள்நாட்டு சந்தையில் தேங்காயின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.

தலைநகர் கொழும்பில் 80 ருபா அல்லது 85 ரூபாவிற்கு தேங்காய் விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதே நிலைமையே காணப்படுகிறது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]