தேங்­காய் பிடுங்க மரத்­தில் ஏறிய நபருக்கு ஏற்பட்ட விபரீதம்!!

தேங்­காய் பிடுங்க மரத்­தில் ஏறிய ஐந்து பிள்­ளை­க­ளின் தந்­தை நெஞ்­சு­வலியால் சாவடைந்தார் இந்­தச் சம்­ப­வம் வரணி இயற்­றா­லை­யில் இடம்­பெற்­றுள்­ளது.

வள­வுக்­குள் நின்ற தென்­னை­ம­ரத்­தில் ஏறி தேங்­காய் பிடுங்­கிய போது நெஞ்­சு­வலி ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்து ஓலை­க­ளைக் கட்­டிப் பிடித்­துக்கொண்டு மரத்தில் இருந்துள்ளார்.

இத­னை­ய­டுத்து அய­ல­வர்­கள் ஓடி­வந்து மரத்­தில் ஏறி கீழே இறக்கி மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு சென்றனர். எனினும் அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

அதே இடத்­தைச் சேர்ந்த அப்­பையா சிவ­கு­மார் (வயது 42) என்பவரே உயிரிழந்தார். இறப்புத் தொடர்­பாக கொடி­ கா­மம் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]