தெஹ்ரானின் அடையாள சின்னங்களில் ஒன்று எரிந்து தரைமட்டம்

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் அடையாளமாக விளங்கிய பிளாஸ்கோ கட்டிடத்தில் தீ பரவியதை அடுத்து, அது இடிந்து தரைமட்டமாகியுள்ளது. அத்துடன் , இந்த விபத்தில் சுமார் 30 பேர் வரை பலியாகியிருக்க கூடும் என அஞ்சப்படும் நிலையில், தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள் உட்பட 25 பேர் படு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

building collapse in iran Plasco_building_on_fire_by_Emi_uploaded_by_Mardetanha_(2) Plasco_collapsed_Tasnim

மேலும், சுமார் 300 பேர் வரை கட்டிடத்தின் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில், அவர்களின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை என சொல்லப்படுகிறது. அத்துடன், பிளாஸ்கோ கட்டிடத்தின் உரிமையாளரும் கட்டிடத்தின் உள்ளே மாட்டிக் கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வதற்கு இலகுவாக, அந்தப் பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது.

1960 ஆம் ஆண்டு ஈரானிய யூத தொழிலதிபர் ஹபீப் ஏலக்கானியன் என்பவரால் கட்டப்பட்ட மேற்படி கட்டிடம், அப்போதைய கால கட்டத்தில் தெஹ்ரானில் மிக உயரமான கட்டிடமாக அந்நகரத்தில் கம்பீரமாக காட்சியளித்துள்ளது. 17 மாடிகளை கொண்டுள்ள பிளாஸ்கோ கட்டிடம் ஆரம்ப காலத்தில் மக்கள் குடியிருப்பாக இருந்து, பின்னர் வணிக வளாகமாக மாறியது இங்கு குறிப்பிடத்தக்கது.