தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வசமானது

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி

தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வசமானது

கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வசமிருந்த தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபையின் முதல்வராக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்டேன்லி டயஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்றையதினம் முற்பகல் வேளையில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் போதே அவர் தெரிவானார். இவ்வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு 23 வாக்குகளும், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளரும், முன்னாள் நகரசபை தலைவருமான சுனெத்ரா ரணசிங்கவிற்கு 21 வாக்குகள் மாத்திரமே கிடைத்தது.

நடந்துமுடிந்த உள்ளுராட்சிசபைத் தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றிற்கு 19 ஆசனங்கள் வீதம் கிடைக்கப்பெற்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு 6 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில், ஜேவிபிக்கு 4 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. இந்த நிலையில், இன்றைய வாக்கெடுப்பின்போது, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 2 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளித்திருந்த நிலையில், மற்றைய நால்வரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளித்தனர். ஜேவிபியின் 4 உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]