தெலுங்கானா பஸ் விபத்தில் 25இற்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழப்பு!

தெலுங்கானா பஸ் விபத்தில் 25இற்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழப்பு!

தெலுங்கானா மாநிலத்தில் பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், 25இற்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப்பகுதியில் இன்று (செவ்வாய்கிழமை) பயணிகளுடன் வந்துகொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது மலைப்பள்ளத்தாக்கில் இருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் 25இற்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதே நேரம், 20இற்கும் அதிமானவர்கள் படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பலரினது நிலைமை கவலைகிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் மற்றும் மீட்பு பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, மீட்பு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

தெலுங்கானா பஸ் விபத்தில் தெலுங்கானா பஸ் விபத்தில் தெலுங்கானா பஸ் விபத்தில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]