தெற்கில் எதிர்வரும் 3 வருடங்களில் 5 பில்லியன் முதலீடு

 


இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள இதுவரை 50 முதலீட்டாளர்கள் இணக்கம் தெரிவித்து, அதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச வர்த்தக ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
இந்நிலையில் தெற்கில் எதிர்வரும் 3 வருடங்களில் 5 பில்லியன்கள் வரை முதலீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்தார்.


ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தல விமான நிலையங்களுக்கு 15 பில்லியன்களை வருடமொன்றுக்கு கடன்களின் வட்டித்தவணையாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதோடு, துறைமுகத்தின் பராமரிப்பு செயற்பாடுகளுக்கு வருடமொன்றுக்கு ஆயிரம் மில்லியன் ரூபா செலவாகுவதாக ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் எதிர்கால நலனை கருத்திற்கொண்ட சமூக மற்றும் பொருளாhதார பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு வலுவான வேலைத்திட்டங்கள் முக்கியமெனவும், முதலீட்டு சந்தர்ப்பங்களை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.