தெருவில் காத்திருந்த சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மைத்திரி

தெருவில் காத்திருந்த சிறுமிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ள   சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. நிகழ்விற்கு நேற்று சென்று கொண்டிருக்கும் போது அஸ்கிரிய மைதானத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசிக்கும் சிறுமி ஒருவர் வீதி அருகே வந்து ஜனாதிபதி செல்லும் வாகனங்களை நோக்கி பார்வையிட்டுள்ளார்.

ஜனாதிபதி தனது நிகழ்வுகளை நிறைவு செய்து விட்டு திரும்பி செல்லும் போதே அந்த சிறுமி வீதிக்கு அருகில் வந்து ஜனாதிபதியின் வாகனத்தை பார்வையிட்டுள்ளார். இதனை அவதானித்த ஜனாதிபதி உடனடியாக வாகனத்தை நிறுத்துமாறு பாதுகாப்பு பிரிவிற்கு அறிவித்துள்ளார். பின்னர் வாகனத்தில் இருந்து இறங்கி அந்த சிறுமிக்கு அருகில் சென்ற ஜனாதிபதி அவரது நலன் விசாரித்துள்ளார்.

அவ்விடத்திற்கு சென்ற அந்த சிறுமியின் பெற்றோருக்கு இந்த சம்பவம் நம்ப முடியாத விடயமாக உள்ளதென தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]