தெரியாம சுட்டுட்டேன் : சந்தேகநபர் வாக்குமூலம்

”நல்­லூ­ரில் உள்ள வீட்­டில் தண்­ணி­ய­டிச்­சுட்டு அந்­தச் சந்­தி­யில் வந்து நின்­றம். பொலிஸ்­கா­ரன் வரேக்க, உனக்கு தைரி­யம் இருந்தா அவன்ர துவக்கை எடுத்­துச் சுடடா பார்ப்­பம் என்று மச்­சான் சொன்­னான். பொலிஸ்­கா­ரன்ர துவக்கை எடுக்­கேக்க தெரி­யா­மல் சுடு­பட்­டுட்­டு­து”­ இவ்­வாறு நல்­லூர் துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­தாக பொலி­ஸா­ரால் தேடப்­பட்டு வந்த முதன்­மைச் சந்­தே­க­ந­பர் பொலி­ஸில் நேற்­றுச் சர­ண­டைந்து வழங்­கிய வாக்­கு­மூ­லத்­தில் தெரி­வித்­தார்.

தெரியாம சுட்டுட்டேன்

சந்­தே­க­ந­பர் யாழ்ப்­பாண நீதி­வான் எஸ்.சதீஸ்­த­ர­னின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­தில் நேற்று மாலை முற்­ப­டுத்­தப்­பட்­டார். அவரை எதிர்­வ­ரும் 8ஆம் திகதி வரை­யில் விளக்­க­ம­றி­ய­லில் வைக்க நீதி­வான் உத்­த­ர­விட்­டார்.

நல்­லூ­ரில் கடந்த சனிக்­கி­ழமை மாலை 5.15 மணி­ய­ள­வில் துப்­பாக்­கிச்­சூட்­டுச் சம்­ப­வம் இடம்­பெற்­றி­ருந்­தது. யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­ய­னின் மெய்ப்­பா­து­கா­வ­ல­ரது பிஸ்­டலை பறித்தே துப்­பாக்­கிச்­சூடு நடத்­தப்­பட்­டி­ருந்­தது. தன்னை இலக்கு நோக்­கி­ய­தாக இந்­தச் சம்­ப­வம் இருக்­கக் கூடும் என்று சந்­தே­கிப்­ப­தாக நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் தெரி­வித்­தி­ருந்­தார். பொலி­ஸார் அதனை மறுத்­தி­ருந்­த­னர்.

சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தே­கத்­தில் இரு­வர் அன்­றி­ரவே கைது செய்­யப்­பட்­டி­ருந்­த­னர். முக்­கிய சந்­தே­க­ந­ப­ரைத் தேடி வரு­வ­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­தி­ருந்­த­னர். அவர் வெளி­மா­வட்­டத்­துக்கு தப்­பிச் சென்­றி­ருந்­த­தா­க­வும், அவ­ரைத் தேடி கிளி­நொச்சி மற்­றும் முல்­லைத்­தீ­வுக்கு சிறப்பு பொலிஸ் குழுக்­கள் சென்­றுள்­ள­தா­க­வும் பொலிஸ் தரப்­புத் தக­வல்­கள் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

தெரியாம சுட்டுட்டேன்

இந்த நிலை­யில் திடீ­ரென – யாருமே எதிர்­பார்க்­காத நிலை­யில், பொலி­ஸா­ரால் தேடப்­பட்ட முதன்­மைச் சந்­தே­க­ந­பர் யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் நேற்­றுக் காலை 8.20 மணி­ய­ள­வில் சர­ண­டைந்­தார். அவ­ரி­டம் நேற்று மாலை 5 மணி­வரை வாக்­கு­மூ­லம் பெறப்­பட்­டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]