தென் ஆப்ரிக்காவில் ஆயுத கிடங்கு வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழப்பு

தென் ஆப்ரிக்காவில் ஆயுத கிடங்கு வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் பலர் காயம் அடைந்த நிலையில், இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தென் ஆப்ரிக்கா நாட்டின் தலைநகரமான கேப் டவுனில் சாமர்செட் நகரின் மேற்கு பகுதியில் ஆயுத கிடங்கு அமைந்துள்ளது.

இந்த ஆயுத கிடங்கில் கன ரக ஆயுதங்கள், கையெறி குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டு இருந்த நிலையிலேயே இந்த கிடங்கு திடீரென வெடித்துச் சிதறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]