தென் ஆபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடருக்குரிய இலங்கை அணி அறிவிப்பு.

தென் ஆபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இலங்கை அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியூஸ் உபாதையடைந்துள்ள நிலையில் தரங்காவின் தலைமையில் சந்திமால்,தனஞ்சய டி சில்வா,நிரோஷான் டிக்வெல்ல,சாந்தன் வீரக்கொடி, குசல் மெண்டிஸ், அசேல குணரத்ன, சத்துரங்க டி சில்வா, அசேல குணரத்ன, ஷாகித் புத்திரனை, ஜேப்ரி வண்டர்சி, லக்ஸன் சண்டகன், லஹிரு மதுசங்க, நுவான் குலசேகர, லஹிரு குமார , விக்கும் சஞ்சய் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்டதான தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 28 ம் திகதியும், 2 வது போட்டி 1 ம் திகதியும், 3 வது போட்டி 4 ம் திகதியும், 4 வது போட்டி 7 ம் திகதியும், 5 வது போட்டி 10 ம் திகதியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது