தென்னாபிரிக்க அணியை செதுக்கிய இலங்கை

தென்னாபிரிக்க அணியை

தென்னாபிரிக்க அணியை செதுக்கிய இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி இலங்கையணியுடன் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் நடைபெற்றது. மூன்றாவது நாளான இன்றுடனே போட்டி முடிவுக்கு வந்தது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் சுரங்க லக்மல் முதலில் துடுப்பெடுத்தாடுவதாக தெரிவித்தார். ஆரம்பம் முதலே தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 287 ஓட்டங்களைக் குவித்தது. திமுத் கருணாரட்ன ஆட்டமிழக்காது 158 ஓட்டங்களைக் குவித்தார். மற்றைய அனைவரும் சொற்ப ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க சார்பில் றபாட 4 விக்கெட்டுகளையும், ஷம்ஸி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதலாவது இன்னிங்க்ஸை தொடங்கிய தென்னாபிரிக்க அணி இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர் கொள்ள திணறியது. தென்னாபிரிக்க அணி தலைவர் டூ ப்ளசிஸ் 49 ஓட்டங்களுடன் 126 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கையணியின் பந்து வீச்சு சார்பில் டில்ருவான் பெரேரா 4 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மல் 3 விக்கெட்டுகளையும், ஹேரத் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

161 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்க்ஸை தொடங்கிய இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தது. 190 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. திமுத் கருணாரட்ன 60 ஓட்டங்களையும், மத்தியூஸ் 35 ஓட்டங்களையும், சுரங்க லக்மல் ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்றனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் மகாராஜ் 4 விக்கெட்டுகளையும், றபாட 3 விக்கெட்டுகளையும் கைப்பெற்றனர்.

352 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, இலங்கை அணி இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர் கொள்ள முடியாமல் 73 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாபிரிக்க சார்பில் பிளான்டர் 22 ஓட்டங்களைக் குவித்தார்.

இலங்கையணியின் டில்ருவான் பெரேரா அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அவருக்குத் துணையாக ரங்கன ஹேரத் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

தென்னாபிரிக்க அணியை

ஆட்டநாயகனாக திமுத் கருணாரட்ன தேர்வு செய்யப்பட்டார். ஆட்டத்தின் சிறப்பம்சம் என்னவெனில் கருணாரட்ன அடித்த மொத்த ஓட்டங்களைக் கூட தென்னாபிரிக்க அணிய தொட முடியவில்லை. கருணாரட்ணவின் ஓட்டங்கள் 158+60= 218. தென்னாபிரிக்க அணியின் மொத்த ஓட்டங்கள் 126+73= 199

மூன்று நாட் களுக்குள்ளேயே இந்த போட்டி நிறைவுக்கு வந்தது. தென்னாபிரிக்க அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]