தென்னாபிரிக்கா அணி அபார வெற்றி

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 34.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 193 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 81 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

திசர பெரேரா 49 ஓட்டங்கள்.

பந்து வீச்சில் ரபாடா மற்றும் ஷம்ஸி ஆகிய இருவரும் தலா 4 விக்கட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

அதன்படி , 194 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 31 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

தென்னாபிரிக்கா அணி சார்பில் ஜே.பி துமினி ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களைப்பெற்றுக்கொண்ட அதேவேளை , டூ பிளசிஸ் மற்றும் டீ கொக் ஆகிய இருவரும் தலா 47 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் அகில தனஞ்சய 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இதேவேளை, இன்று இடம்பெறும் போட்டியில் இலங்கை அணிக்கு கிடைக்கும் ஊதியத்தில் 25 சதவீத நிதி, விளையாட்டுத் துறை அமைச்சுக்கு வழங்கப்பட உள்ளது.

முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு உதவி வழங்குவதற்காக இந்த நிதியை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]