முகப்பு News தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 245 ஓட்டங்கள்

தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 245 ஓட்டங்கள்

தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 245 ஓட்டங்கள்

இலங்கை தென்னாபிரிக்கா அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் நடைபெறுகிறது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையணியின் தலைவர் ஏஞ்சலோ மத்தியூஸ் முதலில் துடுப்பெடுத்தாடுவதாக தெரிவித்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக டிக்வெல மற்றும் தரங்கா களமிறங்கினார்கள். இலங்கை அணியின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்து கொண்டிருந்தது.

மறுமுனையில் டிக்வெல நிதானமாக துடுப்பெடுத்தாடினர்.டிக்வெல மற்றும் மத்தியூஸ் 4வது விக்கெட்டுக்கு இணைப்பாட்டமாக 67 ஓட்டங்களை குவித்தனர்.

இலங்கை அணி 50 ஓவர்களின் முடிவில் 244 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்தது. இலங்கை அணி சார்பாக மத்தியூஸ் ஆட்டமிழக்காது 79 ஓட்டங்களையும், டிக்வெல 69 ஓட்டங்களையும் குவித்தனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்கா சார்பில் பெஹழுவாயோ மற்றும் நிகிடி தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 245 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com