தென்னாபிரிக்காவில் அதிகளவிலான இறந்த யானைகளின் உடல்கள் கண்டெடுப்பு

தென்னாபிரிக்காவில் அதிகளவிலான இறந்த யானைகளின் உடல்கள் கண்டெடுப்பு

தென்னாபிரிக்க நாடுகளில் ஒன்றான பொஸ்வானாவில் அண்மையில் 87 யானைகளின் இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ‘எல்லைகளற்ற யானைகள்’ (Elephants Without Borders – EWB) என்ற அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனினும், குறித்த அமைப்பின் அறிக்கையை வனஜீவராசிகள் திணைக்களம் மறுத்துள்ளது.

EWB நிறுவனத்தை வனஜீவராசிகள் திணைக்களம் விசாரணை செய்துள்ள நிலையில், குறித்த தகவலிற்கிணங்க, அவ்விடத்தில் யானையின் இறந்த உடல்கள் 19 மாத்திரமே கண்டெடுக்கப்பட்டதாகவும், அவற்றில் சில இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவை என்றும் நேற்று (புதன்கிழமை) குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இத்தகவல் வெளியானதைத் தொடர்ந்து, காட்டு விலங்குகளின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பொஸ்வானாவின் திணைக்களம் கூடிய கவனத்தைச் செலுத்த ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னரே ஆபிரிக்காவின் ஒக்கவாங்கா டெல்டாவில் யானைகளின் இறந்த உடல்கள் காணப்படுவதாக அப்பிராந்தியத்தின் வானூர்தி மையம் தகவல் தெரிவித்திருந்ததாக Elephants Without Borders (EWB)இன் நிர்வாகத் தலைமை அதிகாரி மைக் சேஸ் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்காவில் தென்னாபிரிக்காவில் தென்னாபிரிக்காவில் தென்னாபிரிக்காவில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]