தென்கொரியாவில் பாரிய சூறாவளி: 6000 இற்கும் அதிகமான வீடுகள் சேதம்

தென்கொரியாவில் பாரிய சூறாவளி ஒன்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தென்கொரியாவின் ஜெஜு தீவில் ‘சௌலிக்’ எனப்படும் சூறாவளியே இன்று (வியாழக்கிழமை) தாக்கியுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் காற்று வீசி வந்த நிலையில், இன்று காலை அது சூறாவளியாக உருவெடுத்துள்ளதென தெரிவிக்கப்படுகிற நிலையில், இதில் 6000 இற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், இதில் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், உட்கட்டமைப்புச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மணிக்கு 126 கிலோமீட்டர் வேகத்தில் இச்சூறாவளி வீசியதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

காற்று தொடர்ந்தும் பலமாக வீசி வரும் நிலையில் நாளை நள்ளிரவிற்குள் நாட்டின் மத்திய பகுதியை சூறாவளி தாக்குமென வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும் இச்சூறாவளி ரஷ்யாவிற்கும் நுழையும் வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கபடுவதை முன்னிட்டு, அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, தொடர்ந்து பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]