தூரத்து வழி தாய் மாமாவினால் ஒன்றரை வயது குழந்தைக்கு நடந்த கொடுமை- பின்னர் நடந்த விபரீதம்

18 மாத குழந்தை தூரத்து வழி தாய் மாமாவினால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது குழந்தைக்கு தூரத்து தாய் மாமன் உறவு வரும் இளைஞர் ஒருவரும் அத்திருமணத்திற்கு வருகை தந்துள்ளார். சிறிது நேரம் குழந்தையை தூக்கி வைத்திருத்த அவர், அதன்பின் எங்கு சென்றார் எனத் தெரியவில்லை.

இதனையடுத்து குழந்தையை தாய் தேடிப் பார்த்துள்ளார். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை. இதனிடையே திருமணம் நடைபெற்ற இடத்திற்கு 400 மீட்டர் தொலைவிலுள்ள புதரில் குழந்தை ரத்தம் வெளியேறிய நிலையில் சுயநினைவின்றி கிடந்துள்ளதை சிலர் பார்த்துள்ளனர்.

இக்குழந்தை திருமணத்தில் காணாமல் போன ஒன்றரை வயது குழந்தை எனத் தெரியவந்தது. குழந்தையின் வயிற்றுப் பகுதியில் ரத்தம் அதிகம் வெளிப்பட்டிருந்ததால் குழந்தையை அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இதனிடையே பாதிக்கப்பட்ட குழந்தையுடன் அவரது தாய் அந்த இடத்திலிருந்த வெளியேறவே முதலில் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் அந்த இளைஞரை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]