தூத்துக்குடி படுகொலைசெய்யப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி யாழில் கண்டன போராட்டம்

இந்தியா தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டிய யாழில் கண்டன போராட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன், உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக இன்று சனிக்கிழமை மதியம் 3.00 மணியளவில் இந்த கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது, இந்திய தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட தமிழக உறவுகளுக்கு நீதி வேண்டி ஈழத்து உறவுகளினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் கேட்டது நீதி கிடைத்தது மரணம். இந்திய அரசே தமிழர் தேசத்தினை நாசமாக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடு முள்ளிவாய்க்காலின் வெறித்தனம் தூத்துக்குடியிலுமா? போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு தமது கண்டனத்தினையும், எதிர்ப்பினையும் தெரிவித்து போராட்டத்தினை முன்னெடுத்தார்கள்.

தூத்துக்குடி படுகொலை தூத்துக்குடி படுகொலை

இந்த போராட்டத்தில், பாதிரியார்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள், பெண்கள் அமைப்புக்கள், பொது மக்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]