தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ. குமெரெட்டியாபுரம் கிராம மக்களின் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது.
இதனை முன்னிட்டு தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயிரகணக்கான கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்க சென்ற கிராம மக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கலைக்க முயன்றனர். அப்போது பொதுமக்கள் போலீஸ் வேனை கவிழ்த்ததோடு, தாக்கவந்த போலீஸ்கார்ரகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
ஆயிரகணக்காக திரண்ட மக்கள், அத்தனை தடுப்புகள், தடியடிகளை தாண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 9க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் திரேஸ்புரத்தில் எஸ்பி வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள் மீது போலீசார் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். . இந்த துப்பாக்கிச்சூட்டில் உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன், தாமோதர் நகர் பகுதியில் வசிக்கும் மணிராஜ், குறுக்குசாலையை சேர்ந்த தமிழரசன் , ஆசிரியர் காலணியை சேர்ந்த சண்முகம் , மேட்டுப்பட்டியை சேர்ந்த கிளாஸ்டன் , தூத்துக்குடியை சேர்ந்த கந்தையாஉள்பட 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் கெனிஸ்டா என்ற 17வயது மாணவி, போலீசார் சுட்டதில் வாயில் துப்பாக்கிக் குண்டு பலியானார். இன்னும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதுக்கப்பட்டுள்ளதால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் தவிர்க்க முடியாத நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]