தூத்துக்குடியில் படுகொலைக்கு நீதிகோரி யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதிகோரி யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தூத்துக்குடி படுகொலையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, இந்திய மோடி அரசே தூத்துக்குடிக்குப் பதில் என்ன, சுத்தமான சூழல் ஒரு மனித உரிமை. ஸ்ரெர்டர் லைட் ஆலை மன்னார் வளைகுடாவிற்கும் ஆபத்து, மோடி எடப்பாடி ஆட்சியாளர்களே தூத்துக்குடிக்கு தண்டனை என்ன தமிழ் நாட்டு ஆட்சியே நீதி கேட்ட மக்களுக்கு துப்பாக்கி குண்டுகளா போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு இந்திய மோடி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பினையும் கண்டனத்தினையும் தெரிவித்து போராட்டத்தினை முன்னெடுத்தார்கள்.

தூத்துக்குடியில் படுகொலைக்கு தூத்துக்குடியில் படுகொலைக்கு

இந்த போராட்டத்தின் நிறைவில், இலங்கை;கான இந்திய துணைத்தூதரக அதிகாரிகளிடம், தமிழ் நாட்டு அரசிற்கு மகஸர் ஒன்றினையும் கையளித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]