தூக்கம் வரவில்லையே என தூக்க மாத்திரை பயன்படுத்துபவரா நீங்க?

இன்றைய நாகரீக உலகில் வாழும் பலரும் தொடர்ச்சியான வேலைக் காரணமாகவும் மோசமான உணவு பழக்கத்தினாலும் பல பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியள்ளது.

அதில் ஒன்று தூக்கமின்மை, இதனால் பல உடல் பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதன் காரணமாக பலரும் தூக்க மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இந்த பதிவில் அப்படி தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி பார்க்கலாம்.

தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவதால் பகல் வேலைகளிலும் தூக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக மனதானது குழப்பம் அடைந்து., பணிகளின் போது கவனக்குறைவானது ஏற்படலாம். தூக்க மாத்திரைகள் தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்துவதன் மூலமாக இன்சோமோனியா பிரச்சனையை குறைகிறது.

இதன் விளைவாக நமக்கு தலைவலி மற்றும் முதுகுவலியானது ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாது தூங்கும் சமயத்தில் சுவாசப்பாதையில் ஒரு விதமான தடையை ஏற்படுத்தி மூச்சுத்திணறல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. நீண்ட காலத்திற்கு தொடர்ந்து தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டோம் என்றால் புற்றுநோய் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் ஏற்படலாம்.

ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளப்படும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளானது கோமா மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. உடலில் இருக்கும் ஆக்சிஜனின் அளவானது குறைந்து நிம்மதியற்ற உறக்கம் மட்டுமே நமக்கு கிடைக்கும். வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரையை சேர்ந்து நாம் உபயோகித்தால் வாந்தி., குமட்டல் மற்றும் திடீர் பதற்றத்துடன் வியர்வை வெளியேறும். இந்த அறிகுறி இருப்பின் தூக்க மாத்திரையை கைவிடுவது நல்லது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]