பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக விரைவில் மரண தண்டனை

இந்திய உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு சாலையோர ரோமியோக்களை கட்டுப்படுத்தும் விதமாக “ரோமியோ எதிர்ப்புப் படை” அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த நடவடிக்கையை பாராட்டிய மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் செளஹான், பெண்கள் மீது துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

தற்போதைய இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, பாலியல் வல்லுறவு குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை தண்டனை வழங்கமுடியும்.

பாலியல் வன்முறைக் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை வழங்க வகை செய்யும் ஒரு சட்டவரைவை கொண்டு வர உத்தேசித்திருப்பதாக செளஹான் கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு

வெள்ளிக்கிழமையன்று, போபாலில் நடைபெற்ற மத்தியப் பிரதேச போலீஸ் அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் பேசிய செளஹான், “சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு சிறைதண்டனை வழங்குவதற்கு பதில் மரண தண்டனை வழங்கும் மசோதா, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும்” என்று கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]