துமிந்த சில்வாவின் மூளையில் பாரிய பாதிப்பு

துமிந்த சில்வாவின் மூளையில் பாரிய பாதிப்பு
துமிந்த சில்வாவின்
சிறைச்சாலையில் உள்ள துமிந்த சில்வாவின் மூளையில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதை 9 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழுவொன்று பரிந்துரை செய்துள்ளது.
மூளையின் முன்பக்கத்தில் சிதைந்த மண்டை ஓட்டின் பகுதி மற்றும் தோட்டாவின் பகுதி தோட்டாவின் துகள்கள் மூளையின் உட்பகுதிக்குள் படிந்துள்ளது.
 மன அழுத்தம் மற்றும் சிக்கல் தன்மை காரணமாக நோய் தன்மை அதிகரிக்கும் நிலை.
 பரிசோதனையின் போது ஆசனத்திலிருந்து எழுவதில் சிரமம்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் உடல்நிலை தொடர்பில் சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றது மற்றும் பொய்யானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற பரிந்துரைக்கு அமைய சிறப்பு மருத்துவர் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், துமிந்த சில்வா தொடர்ந்தும் மருத்துவ சிகிச்சை பெறவேண்டிய நிலையில் உள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் உடல்நிலை தொடர்பில் பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதற்கமைய, கொழும்பு தேசிய மருத்துவமனையின் ஒன்பது சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, சுகாதார சேவை பிரதிப்பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஜாசிங்கவின் கையொப்பத்துடன் கொழும்பு மேல் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜீ ஏ ஆர் ஆட்டிகலவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு அமைய, மருத்துவர்கள் குழுவினரால் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சீ டீ ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதற்கமைய அவரின் மண்டை ஓடு மற்றும் மூளையில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவரது மண்டை ஓட்டின் உடைந்த செதில்கள் மூளையின் முன்பகுதியில் தங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், மூளையின் சில பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்று சிங்கப்பூர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த போது, மேற்கொள்ளப்பட்ட சி.ரி. ஸ்கான் பரிசோதனைகளின் தரவுகளுக்கும் மருத்துவ குழுவினர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை தரவுகளுக்கும் இடையே எந்த விதமான வேறுபாடுகளும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
துமிந்த சில்வாவின் மூளையில் ஏற்பட்டுள்ள அசாதாரண மாற்றங்கள் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த நோய்கள் மேலும் தீவிரமடைவதற்கான சந்தர்ப்பங்களும் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, துமிந்த சில்வாவிற்கு சாதாரணமாக நடமாடுவதில் சிரமத்தன்மை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, துமிந்த சில்வா தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சிங்கப்பூர் மருத்துவ மனையினால், பரிந்துரைக்கப்பட்ட சுவாசம் உபகரணங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நோய்கான சிகிச்சையினை பெறுவது எந்தவொரு மனிதரினதும் அடிப்படை உரிமை என்ற வகையில், யாரும் அதற்கு சவால் விடுக்க முடியாது என இலங்கை மனித உரிமை ஆணையகத்தின் முன்னாள் ஆணையாளர் சட்டதரணி மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]