துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை தொடர்ந்து நியூசிலாந்து பிரதமரின் அறிவிப்பு!

நியூசிலாந்தில் மையப்பகுதியான சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மசூதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை தொடர்ந்து இன்று துக்க தினமாக அனுஸ்டிக்குமாறு அந்த நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட பள்ளிவாசல்கள் மீது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் இது வரை எவ்வித தகவலையும் அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவு மற்றும் பிரதமரின் உத்தியோகப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியிடவில்லை.

எவ்வாறாயினும் 40 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பலர் உயிரிழந்திருப்பதாகவும் உத்தியோகபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]